ஆம்பூர் பேக்கரியில் வாங்கிய ப்ரெட்டில் கரப்பான் பூச்சி! வாடிக்கையாளர் அதிர்ச்சி!

தரமற்ற மற்றும் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யும் கடை மற்றும் உரிமையாளர் மீது உணவு பாதுகாப்பு அலுவலர் நடவடிக்கை எடுப்பதில்லை என சமூக வலைத்தளங்களில் பரவி வருவதால் பரபரப்பு.

ஆம்பூர் பேக்கரியில் வாங்கிய ப்ரெட்டில் கரப்பான் பூச்சி! வாடிக்கையாளர் அதிர்ச்சி!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு வாரிய 5 வது வீதியில் வசித்து வருபவர் சோனா டார்ஜிலிங் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வரும் இவர் ஆம்பூர் ஓ ஆர் தியேட்டர் அருகில் உள்ள  பேக்கரி கடையில் நேற்று இரவு 4 ரொட்டி உள்ளிட்ட தின்பண்டங்கள் வாங்கி வந்துள்ளார் இந்த நிலையில் இன்று பள்ளி முடித்து வந்த அவரது பிள்ளைகளுக்கு டீ மற்றும் ரொட்டி சாப்பிட கொடுத்த போது ரொட்டியில் கரப்பான் பூச்சி இருந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்ந்து ஆம்பூர் நகரப் பகுதியில் உள்ள கடைகளில் போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதால் தரமற்ற மற்றும் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மீது ஆம்பூர் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் நகராட்சியில் உணவு பாதுகாப்பு அலுவலர் செயல்படுகிறாரா? இல்லையா ?என சமூக வலைத்தளங்களில் சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டு பரவி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.