கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு.....! 1000-கும் மேற்பட்ட பானை ஓடுகள் கண்டெடுப்பு...!

கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு.....! 1000-கும் மேற்பட்ட பானை ஓடுகள் கண்டெடுப்பு...!

கீழடியில் தற்போது 9-ம் கட்ட அகழாய்வு  கடநத ஏப்ரல் 6-ல் தொடங்கப்பட்டது. நான்கு குழிகள் தோண்டப்பட்டு நடந்த இந்த பணிகளில், வட்டசில்லு,, பாசிகள், கண்ணாடி மணிகள், வழுவழுப்பான தரைத்தளம் முதலியன கண்டறியப்பட்டன. நான்கில் மூன்று குழிகள் முழுவதும் வழுவழுப்பான தரைத்தளம் உள்ளதால் நான்காவது குழியில் மட்டும் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ஏற்கனவே 7ம் கட்ட அகழாய்வின் போது இரண்டு உலைகலன்கள் கண்டெடுத்ததைக் கொண்டு, இந்த இடம் மண்பாண்ட உற்பத்தி கூடங்கள், மண்பானைகள் இருப்பு வைக்கப்படும் குடோன்களாக செயல்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இக்குழியில், 1000-க்கும் மேற்பட்ட பாமை ஓடுகள் கிடைத்தா வண்ணம் இருக்கிறது. இதுவரை இந்த இடத்தில் சிறியதும் பெரியதுமாக பல பானை ஓடுகள் கிடைத்துள்ள நிலையில், இந்த இடம் பானை உற்பத்தி செய்யும் இடமாக இருந்திருக்கக்கூடும்  என  யூகிக்கப்படுகிறது. மேலும், மண் அடுக்குகளில் கறிமன்னு கிடைப்பதால் மண் பானைகளை உலைகலன்  போன்று அமைத்து சுட வைத்திருக்கலாம் எனக்  கருதப்படுகிறது. 


மேலும், பானை ஓடுகள் மற்றும் கறிமன் உள்ளிட்டவற்றை பகுப்பாயசவிற்கு அனுப்ப தொல்லியல் துறையினர் முடிவு செய்து உள்ளார். அதன் பின்  இந்த இடத்தின் பயன்பாடு குறித்து உறுதியான முழு தகவல்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.    இந்த ஆய்வு வீரனான என்பவரது நிலத்தில் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க    }  ’ தி கேரளா ஸ்டோரி ‘ - இருமுனைகளில் தொடரும் போராட்டங்கள்..!