கேரளாவில் ஜீப் கவிழ்ந்து விபத்து; தமிழ்நாட்டை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு!

கேரளாவில் ஜீப் கவிழ்ந்து விபத்து; தமிழ்நாட்டை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு!

வயநாடு அருகே ஜீப் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தமிழ்நாட்டை சேர்ந்த பெண் தொழிலாளர்கள் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கேரள மாநிலம் வயநாடு அருகே தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுடன் ஜீப் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, மானந்தவாடி பகுதியில் சாலையோரத்தில் உள்ள 25 அடி ஆழ பள்ளத்தில் அந்த ஜீப் எதிர்பாராதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பெண் தொழிலாளர்கள் 9 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், முட்புதர் மற்றும் மரங்களுக்கு இடையே சிக்கி படுகாயம் அடைந்த 4 பேரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானார் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, வயநாட்டில் நிகழ்ந்த விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழந்த நிகழ்வுக்கு மாநில பாஜ.க. தலைவர் அண்ணாமலை ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், காயம் அடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க கேரள அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவர் தனது டிவிட்டர் பதிவில் கேட்டுக் கொண்டுள்ளார். 

இதையும் படிக்க: "காவிரியை பங்கிட்டால்தான் தேர்தலில் பங்கீடு என முதலமைச்சர் அழுத்தம் தந்திருக்க வேண்டும்" சீமான் கருத்து!