தட்க்ஷிணாமூர்த்தி கோவிலில் பல லட்சம் மதிப்புடைய 9 சுவாமி சிலைகள் திருட்டு

தேனியில் பிரசித்தி பெற்ற தட்க்ஷிணாமூர்த்தி கோவிலில் பல லட்சம் மதிப்புள்ள ஒன்பது சுவாமி சிலைகள் திருடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தட்க்ஷிணாமூர்த்தி கோவிலில் பல லட்சம் மதிப்புடைய 9 சுவாமி சிலைகள் திருட்டு

தேனி அடுத்த அரண்மனைபுதூர் பகுதியில் தட்க்ஷிணாமூர்த்தி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று நள்ளிரவு புகுந்த மர்மநபர்கள், கோவிலின் மூலவர் சிலை பின்பக்கம் உள்ள கண்ணாடியை உடைத்து, ஐம்பொன்னால் ஆன நான்கு சனாதன முனிவர்கள் மற்றும் வேத வியாசகர், மாணிக்கவாசகர், தாயுமானவர், பலிபீடம் மற்றும் நந்திகேஸ் வரர் சிலைகள் என ஒன்பது சிலைகளை திருடிச்சென்றுள்ளனர்.

சிலைகள் திருடு போனதை அறிந்த அர்ச்சகர்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டதில், திருடு போன சிலைகள் பல லட்சம் மதிப்புள்ளவை என்பதும், சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்து இருந்ததும் தெரியவந்தது. மேலும், அப்பகுதியில் நடந்த சோதனையில் வேத வியாசகர் சிலை கண்டிபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மர்மநபர்களையும், சிலைகளையும் தேடி வருகின்றனர்.