தமிழ் மக்களின் அன்புக்குரிய கதாநாயகன் கேப்டனுக்கு இன்று பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் 69 வது பிறந்தநாள்  எளிமையான முறையில் கொண்டாடப்படும் நிலையில் அவருக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

தமிழ் மக்களின் அன்புக்குரிய கதாநாயகன் கேப்டனுக்கு இன்று பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் 69 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது வீட்டின் முன்பு கட்சிக் கொடி மற்றும் வண்ண விளக்குகளால் தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2006 ம் ஆண்டு முதல் தனது பிறந்தநாளை 'வறுமை ஒழிப்பு தினமாக' விஜயகாந்த் கொண்டாடி வரும் சூழலில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக இந்த ஆண்டு தனது பிறந்தநாளுக்கு நேரில் வாழ்த்து தெரிவிக்க தொண்டர்கள் யாரும் வீட்டுக்கு வர வேண்டாம் என்றும் தேமுதிகவினர் அவரவர் ஊர்களில் நலத்திட்ட உதவிகளை வழங்குமாறும்  வேண்டுகோள் விடுத்திருந்தார். இதன் காரணமாக தொண்டர்கள் வருகையின்றி விஜயகாந்த் வீடு வழக்கமான நாட்களைப் போல காணப்பட்டது.

மேலும் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு சாலிகிராமம் கண்ணம்மாள் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு கட்சிக் கொடி மற்றும் அலங்கார மின் விளக்குகளால் தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. அவரது வீட்டின் நுழைவுவாயிலில் உள்ள 'விஜய கணபதி' சிலை அலங்கரிக்கப்பட்டு அர்ச்சகர் ஒருவர் மூலம் பூஜை நடத்தப்பட்டது.

இதனிடையே விஜயகாந்தின் 69 வது பிறந்தநாளை யொட்டி அவருக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் டிவிட்டர் பக்கத்தில் வெள்யிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,  தே.மு.தி.க. நிறுவனரும் தமிழ் மக்களின் அன்புக்குரிய கதாநாயகருமான நண்பர் கேப்டன் அவர்கள் நீண்ட நாட்கள் உடல்நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ அவரது பிறந்தநாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.