பசுமாட்டின் வயிற்றில் இருந்த 50 கிலோ ப்ளாஸ்டிக் - துணிக்கழிவுகள்

பசுமாட்டின் வயிற்றில் இருந்த 50 கிலோ ப்ளாஸ்டிக் - துணிக்கழிவுகள்

மதுரை கருப்பாயூரணி பகுதியை சேர்ந்த பாண்டி என்பவர் சந்தையில் இருந்து ஜெர்சி வகை பசுமாட்டினை வாங்கிவந்து வீட்டில் வளர்த்துள்ளார். இந்நிலையில் பசுவுக்கு கடந்த சில நாட்களாக வயிறு பெரிய அளவிற்கு வீங்கி இருந்துள்ளது.  பசு உணவு எதுவும் உண்ணாமல் நோய்வாய்ப்பட்டு எழுந்து நடக்க முடியாமல்  தவித்துள்ளது.

மேலும் படிக்க | தமிழகம் மதுவால் சீரழிந்து போனதற்கு தி.மு.க அரசு தான் காரணம்- ஹெச்.ராஜா

மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் ச மாவட்ட தலைமை கால்நடை மருத்துவர் வைரசாமி தலைமையிலான மருத்துவக்குழுவினர் பசுமாட்டின் வயிற்றுபகுதியை ஸ்கேன் செய்து பார்த்தபோது ப்ளாஸ்டிக் குப்பைகள் வயிற்றில் கிலோ கணக்கில் இருப்பது தெரியவந்துள்ளது.

உடனடியாக மயக்கமருந்து கொடுத்து 4 மணி நேர தொடர் அறுவை சிகிச்சை செய்து பசுவின் வயிற்றுபகுதியில் இருந்து 50 கிலோ அளவிலான ப்ளாஸ்டிக் குப்பைகள் மற்றும் சாக்கு பைகள், துணிகள் கழிவுகளை அகற்றினர்.