ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 41 வேட்புமனுக்கள் நிராகரிப்பு .....

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்  41 வேட்புமனுக்கள் நிராகரிப்பு .....

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளதுஅதற்கான வேட்பு மனு தாக்கல் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த 31ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - 96 பேர் வேட்பு மனுதாக்கல் | erode east  constituency filing completed more than 70 candidates filed

இதில் காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, தேமுதிக, அமமுக, அதிமுகவின் ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி உட்பட பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என 96 பேர் சுமார் 121 வேட்பமானுக்களை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் வேட்டுவனும் பரிசீலனை இன்று நடைபெற்றது. ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் காலை 11 மணிக்கு தொடங்கி 1 மணி வரை நடைபெற்ற இந்த வேட்பு மனு பரிசீலனை கூட்டமானது தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ்முன்னிலையில் நடைபெற்றது.

மேலும் படிக்க| திமுக தேர்தல் வக்குறுதி புதுமைப்பெண் திட்டம்: மாதந்தோறும் 1000 உதவித்தொகை ..... மகிழ்ச்சியில் மாணவிகள்


இதில் ஒவ்வொரு வேட்பாளரும் தலா இரண்டு நபர்களுடன் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.இந்த வேட்பு மனு பரிசீலனை கூட்டத்தில் ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி சிவக்குமார் எந்தெந்த வேட்புமனுக்கள் ஏற்பு எனவும், தள்ளுபடி எனவும் வரிசையாக தெரிவித்தார். இதில் அதிமுகவின் கே எஸ் தென்னரசு, காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன், நாம் தமிழர் கட்சியின் மேனகா நவநீதன், தேமுதிகவின் ஆனந்த், அமமுகவின் சிவ பிரசாந்த் உள்ளிட்ட 80 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
 

41 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது

அதிமுகவின் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த செந்தில் முருகனின் வேட்புமனுவும் முன்மொழிய ஆட்கள் இல்லாததால் நிராகரிக்கப்பட்டது.