திமுக தேர்தல் வக்குறுதி புதுமைப்பெண் திட்டம்: மாதந்தோறும் 1000 உதவித்தொகை ..... மகிழ்ச்சியில் மாணவிகள்

திமுக தேர்தல் வக்குறுதி புதுமைப்பெண் திட்டம்: மாதந்தோறும் 1000  உதவித்தொகை ..... மகிழ்ச்சியில் மாணவிகள்

தமிழகத்தில் ஏழை எளிய மாணவிகள் உயர் கல்வியினை தொடர்கின்ற வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் கல்வி பயின்று உயர் கல்வியினை தொடரும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 அவர்களது வங்கி கணக்கிலேயே நேரடியாக செலுத்தும் வகையில் புதுமைப்பெண் திட்டத்தில் கடந்த வருடம் செப்டம்பர் 5 இல் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதுப்பெண் திட்டத்தில் 2.ம் கட்டமாக உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கும் பணியினை  சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று  துவக்கி வைத்தார்.தென்காசி மாவட்டத்தில் முதற்கட்டமாக 37 கல்லூரிகளின் கீழ் 1418 மாணவிகள் பயன்பெற்ற நிலையில்,

இன்று புதுமை பெண் திட்ட இரண்டாம் கட்ட துவக்க விழா தென்காசி ஐ.சி.ஐ. அரசு பள்ளி கூட்டரங்கில் வைத்து நடந்து. தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.ரவிசந்திரன்  தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் பழனிநாடார், ராஜா, சதன் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக பாதுகாப்பு திட்ட மாவட்ட அலுவலர் முத்துமாரியப்பன் வரவேற்று பேசினார்.

மேலும் படிக்க | செயற்கைக்கோள் பாகங்கள் தயாரித்த அரசு பள்ளி மாணவிகள் 2 வது முறை இஸ்ரோ பயணம்

விழாவில் புதுமை பெண் திட்ட இரண்டாம் கட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்தில் 37 கல்லூரிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 859 மாணவிகளுக்கு உயர் கல்வி படிப்பதற்காக மாதந்தோறும் ரூ.1000 வங்கி கணக்கில் செலுத்தும் வகையிலான வங்கி கணக்கு புத்தகத்தை மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.ரவிச்சந்திரன் வழங்கினார்.இந்த விழாவில் உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகள், சமூக பாதுகாப்புத்துறை அலுவலர்கள், மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.