"முக்கிய பணிகள்".. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் 3 நாள் கருத்தரங்கு!!

மாவட்ட நிர்வாகம், சட்டம் ஒழுங்கு, வளர்ச்சி பணிகள் சார்ந்த ஆய்வினை மேற்கொள்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் 3 நாள் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

"முக்கிய பணிகள்".. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் 3 நாள் கருத்தரங்கு!!

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

பல்வேறு வளர்ச்சி திட்டங்களை விரைவாகவும் செயல்படுத்திடும் வகையில், மார்ச் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை 3 நாட்கள் சென்னையில் கருத்தரங்கு நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கருத்தரங்கில், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொள்ள உள்ளதாக  கூறப்பட்டுள்ளது. மேலும் வனத்துறை சார்ந்த திட்டங்களின் ஆய்வுக்கென மாநாட்டில் முதன்முறையாக  வனத்துறை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாநாட்டின் முக்கிய அம்சமாக மாவட்ட நிர்வாகம், சட்டம் ஒழுங்கு, மாவட்ட வளர்ச்சி பணிகள் உள்ளிட்டவை குறித்து விரிவான ஆய்வினை முதலமைச்சர் மேற்கொள்ள உள்ளதாகவும் மக்களின் தேவைகளை ஆட்சியர்கள் வாயிலாக அறிந்து, அதன் அடிப்படையில் சிறப்பான திட்டங்களை கொண்டு வருவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.