சிறுமி மித்ராவுக்கு 16 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து செலுத்தப்பட்டது...

அரிய வகை மரபு அணு கோளாறு நோயால் பாதிக்கப்பட்ட குமாரபாளையத்தை சேர்ந்த சிறுமி மித்ராவுக்கு 16 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

சிறுமி மித்ராவுக்கு 16 கோடி ரூபாய்  மதிப்பிலான மருந்து செலுத்தப்பட்டது...
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த, 23 மாத பெண் குழந்தை மித்ரா, Autosomal Recessive Spinal Muscular Atropy (SMA)) என்ற, அரிய வகை மரபு அணு கோளாறு நோயால் பாதிப்புக்குள்ளாகி இருந்தது. இதனால் அக்குழந்தையால் நடக்க முடியாமல் போனதுடன் உரிய மருத்துவம் அளிக்காவிட்டால் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டது.இதற்கான ஒரே மருந்து zolgensma அதன் விலை ரூ.16 கோடி என்று சொல்லப்பட்டது. இதனால் மித்ராவின் பெற்றோர் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது குழந்தைக்காக நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
 
அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்ய முடியும். இந்த மருந்தை, குழந்தை இரண்டு வயது நிறைவு செய்வதற்குள் வழங்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. இருப்பினும் மித்ராவுக்கு பல நல்ல உள்ளங்கள் உதவிக்கரம் நீட்ட முன்வந்தனர். இதன் மூலம் குழந்தை மருத்துவ செலவுக்கு தேவையான தொகை கிடைத்து விட்டது. அத்துடன் zolgensma என்கிற ஊசி மருந்து இறக்குமதி செய்யும்போது, அதில் இறக்குமதி வரியை ரத்து செய்யுமாறு பிரதமருக்கு பலர் வேண்டுகோள் விடுத்த நிலையில் மருத்துக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்யப்பட்டது.
 
இந்நிலையில் முதுகு தண்டுவடம் பாதித்த குழந்தை மித்ராவுக்கு ரூ.16 கோடி மதிப்பிலான தடுப்பூசி செலுத்தப்பட்டது.வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசி பெங்களூரு தனியார் மருத்துவமனையில் செலுத்தப்பட்டது.இதை பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பூரித்து வருகின்றனர்.