மேட்டூர் அணை: 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றம்...கரையோரமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மேட்டூர் அணை: 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றம்...கரையோரமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மேட்டூர் அணையிலிருந்து 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அணையிலிருந்து நீர் வெளியேற்றம் நிறுத்தம்:

சமீபத்தில் பெய்த கனமழையால் மேட்டூர் அணை நிரம்பி வெள்ள அபாய எச்சரிக்கை ஏற்பட்டதையடுத்து 16 கண் மதகுகள் வழியாக நீர் தீறந்துவிடப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்ததால் 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்ட நீர் நிறுத்தப்பட்டது.

அணையில் மீண்டும் நீரின் அளவு அதிகரிப்பு: 

இந்நிலையில்  காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் மழை தீவிரமடைந்துள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இன்று காலை 24 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 15 ஆயரத்து 500 அடியாக அதிகரித்துள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை:

அணை நிரம்பியதன் காரணமாக 16 கண் மதகுகளிலிருந்தும் ஐந்து நாட்களுக்குப் பிறகு உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து, உபரிநீர் திறக்கப்படுவதால் சேலம் கேம்ப், பெரியார்நகர், அண்ணாநகர், தங்கமாபுரிபட்டினம் பகுதிகளுக்கு  வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் காவிரியில் குளித்தல், துணி துவைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் தாழ்வான பகுதியில் வசிப்போர் மேடான பகுதிக்கு செல்லவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.