சென்னையில் வடகிழக்கு பருவமழை பாதிப்பை கண்காணிக்க 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்

சென்னையில் வடகிழக்கு பருவமழை பாதிப்பை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் வடகிழக்கு பருவமழை பாதிப்பை கண்காணிக்க 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்

சென்னையில் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வரும் நிலையில், மண்டலத்துக்கு ஒருவர் வீதம் 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. அதன்படி, கமல்கிஷோர், கணேசன், டி.ஜி.வினய், மகேஸ்வரி ரவிக்குமார், பிரதீப் குமார் உள்ளிட்ட 15 ஐ.ஏ. எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரையும் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்பினை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே வெள்ள பாதிப்புகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.