102 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்...!

தொடர் விடுமுறையை ஒட்டி, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, 102 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை வாசிகள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்த வாய்ப்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் சாதாரண நாட்களை விட 2 மடங்கு அதிகமான கட்டணங்களை வசூலித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.


தொடர் விடுமுறை நாட்களில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, போக்குவரத்து துறையினர் சோதனை நடத்தினர். அதன்படி, 8,635 ஆம்னி பேருந்துகளில் நடத்திய சோதனையில் 1545 ஆம்னி பேருந்துகள் விதிகள் மீறியது கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றிற்கு 27 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், வழக்கத்தை விட 2 மடங்கு கட்டணம் வசூலித்த 102 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.