ஒரே நபருக்கு 100 ஏக்கர் அரசு நிலம் பட்டா மாற்றம்... சிக்கிய சப்-கலெக்டர் உள்ளிட்ட 50 பேர்...

தேனி பெரியகுளத்தில் சுமார் 100 ஏக்கர் அரசு நிலத்தை தனிநபருக்கு பட்டா மாறுதல் செய்த விவகாரத்தில் 8 பேர் மீது மேற்பட்ட அதிகாரிகள் மீது 11 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். 

ஒரே நபருக்கு 100 ஏக்கர் அரசு நிலம் பட்டா மாற்றம்... சிக்கிய சப்-கலெக்டர் உள்ளிட்ட 50 பேர்...

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா பகுதியில் உள்ள சுமார் 100 ஏக்கர் அரசு நிலத்தை  அதிமுக முன்னாள் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அன்னபிரகாசம் மற்றும் அவரது உறவினர்களுக்கு முறைகேடாக பட்டா மாறுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் பெரியகுளம் வட்டாட்சியர்கள் கிருஷ்ணகுமார், ரத்தினமாலா மற்றும் துணை வட்டாட்சியர் மோகன்ராம் சஞ்சீவ் காந்தி ஆகியோர் பணியிட நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தேனி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகம் டி.எஸ்.பி. சுந்தர்ராஜ் தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதில் வருவாய்க் கோட்ட அலுவலர்கள் உள்ளிட்ட 7 அரசுத்துறை அதிகாரிகள் மீதும் அதிமுக முன்னாள் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அன்ன பிரகாசம் மீதும், லஞ்சப் பணம் பெற்று ஆவணங்களை திருத்துதல், உள்ளிட்ட 11 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கில் அரசு அதிகாரிகள் உட்பட 50 நபர்கள் மீது வழக்கு பதியப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.