கள்ளச்சாராய விவகாரம்...உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர்!

கள்ளச்சாராய விவகாரம்...உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர்!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

விழுப்புரம், மரக்காணம் அடுத்து எக்கியார் குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதில், வாந்தி மயக்கம் ஏற்பட்டு 15-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சுரேஷ், தரணி, வேலு சங்கர் என்ற மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், நான்கு பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதை தொடர்ந்து, மரக்காணம் மாரியம்மன் கோவில் தெருவை சார்ந்த பிரபல சாராய வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதையும் படிக்க : வார் ரூம்-மை அலங்கரித்த தமிழர்... தாமரையை வீழ்த்தி காட்டிய ஐ.ஏ.எஸ் டீம்!

இந்நிலையில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச ரூபாயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.