ஐபிஎல் போட்டி...! மும்பை இந்தியன்ஸை வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ் 11...!!

ஐபிஎல் போட்டி...! மும்பை இந்தியன்ஸை வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ் 11...!!

ஐபிஎல் கிாிக்கெட் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ அணியை குஜராத் அணியும், மும்பை அணியை பஞ்சாப் அணியும் வென்று வெற்றிவாகை சூடியுள்ளன. 

16-வது சீசன் ஐபிஎல் கிாிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ அணியும், குஜராத் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 128 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.  

மற்றொரு ஆட்டத்தில் மும்பை அணியை பஞ்சாப் அணி எதிா்கொண்டது முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி அதிரடியாக விளையாடி 20 ஓவா்களில் 214 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய மும்பை அணி 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் கிாிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், மற்றொரு ஆட்டத்தில் கொல்கத்தா அணியும், சென்னை சூப்பா் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் வெற்றிக்கனியை பறிக்கப்போவது யாா்? என்பதை அறிய ரசிகா்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனா்.