கோபா அமெரிக்கா கால்பந்து தொடர்,. கொலம்பியாவை வீழ்த்தி பிரேசில் ஹாட்ரிக் வெற்றி.! 

கோபா அமெரிக்கா கால்பந்து தொடர்,. கொலம்பியாவை வீழ்த்தி பிரேசில் ஹாட்ரிக் வெற்றி.! 

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் கொலம்பியாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது பிரேசில் அணி

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள ஒலிம்பிக் மைதானத்தில் இன்று காலை நடைபெற்ற போட்டியில், பிரேசில் - கொலம்பியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தின் 10ஆவது நிமிடத்திலேயே கொலம்பியாவின் ’லூயிஸ் டயஸ்’ அனாயசமாகப் பறந்து கோல் அடித்து, நடப்பு சாம்பியனான பிரேசிலுக்கு அதிர்ச்சி அளித்தார். ஆனால் பதில் கோல் அடிக்க முடியாமல் நட்சத்திர நெய்மார் உள்ளிட்ட பிரேசில் அணியினர் தடுமாறினர். கடைசி கட்டத்தில் பிரேசிலின் ராபர்டோ பிர்மினோ மற்றும் கேப்டன் கேஸமிரோ ஆகியோர் ஆளுக்கொரு கோலடிக்க 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி ஹாட்ரிக் வெற்றி பெற்று அசத்தியது. 

முன்னதாக கோயானியாவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பெரு - ஈக்குவடார் அணிகள் மோதின. பெருவின் ரெனாடோ டாபியா சுயகோல் அடிக்க ஈக்குவடார் முன்னிலை பெற்றது. மேலும், அந்த அணியின் அயிர்டன் பிரசியாடோ ஒரு கோல் அடிக்க, முதல் பாதி முடிவில் 2-0 என வலுவான நிலைக்கு சென்றது ஈக்குவடார். ஆனால், இரண்டாம் பாதியில் அந்த அணி வீரர்கள் கோலேதும் போடாத நிலையில், 49 மற்றும் 54ஆவது நிமிடங்களில் 2 கோல்கள் அடித்து பெரு பதிலடி கொடுத்தது. இதனால் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.