உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை கைவிட்டு போனால் என்ன.? இந்த பெருமை நமக்கு தான்.!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை கைவிட்டு போனால் என்ன.? இந்த பெருமை நமக்கு தான்.!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவை 8 விக்கெட் வீழ்த்தி நியூஸிலாந்து அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது. 

இந்த தொடரில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இறுதிப்போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய அஸ்வின் ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்சை முந்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சளரானார். இதன் மூலம் இந்த தசாப்தத்தின் சிறந்த பந்துவீச்சாளர் நானே என்பதை உலகுக்கு உணர்த்தியுள்ளார் ரவி அஸ்வின்.

இந்திய அணி இறுதி போட்டியில் தோல்வியை சந்தித்திருந்தாலும் ரவிச்சந்திரன் அஸ்வினின் இந்த சாதனை இந்திய ரசிகர்களுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.      

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்:

1. அஸ்வின் - 71 விக்கெட்டுகள்

2. கம்மின்ஸ் - 70 விக்கெட்டுகள்

3. பிராட் - 69 விக்கெட்டுகள்

4. சௌதி - 56 விக்கெட்டுகள்

5. லயன் - 56 விக்கெட்டுகள்