பணம் வந்ததும் கனவு போய்விடுகிறது.. இளம் வீரர்களை விளாசும் சுனில் கவாஸ்கர்!! ஏன்?

நிறைய வீரர்கள் பணத்தை பார்த்தவுடன் தனது கனவை மறந்து விடுகின்றனர் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பணம் வந்ததும் கனவு போய்விடுகிறது.. இளம் வீரர்களை விளாசும் சுனில் கவாஸ்கர்!! ஏன்?

ஐபிஎல் 15 வது சீசன் போட்டிகள் சமீபத்தில் முடிந்தது. அதில் அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் கோப்பையை தட்டி சென்றது.

இந்த முறை ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக் உட்பட பல சீனியர் வீரர்கள் சிறப்பாக விளையாடினர். இதே போல் பல இளம் வீரர்களும் அனைவரின் கவனத்தை ஈர்த்தனர். ஆனால், கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் இந்த ஆண்டின் ஐபிஎல் சீசனில் சிறப்பாக செய்யப்படவில்லை.

வெங்கடேஷ் ஐயர், ருதுராஜ் கெயிக்வாட், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு சென்று விட்டனர். கடந்தாண்டை போல சிறந்த இன்னிங்ஸ்களை அவர்கள் பெறவில்லை என்று தான் கூற வேண்டும்.

இந்நிலையில், இது குறித்து கவாஸ்கர் கூறுகையில், ஐபிஎல் தொடரின் ஒவ்வொரு ஆண்டும் இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரங்கள் கண்டறியப்படுகிறார்கள். முந்தைய சீசனில் கலக்கி வந்த வீரர்கள் நடப்பு சீசனில் படும் மோசமாக விளையாடியிருந்தனர். ஒரு சீசனில் சிறப்பாக விளையாடுவதை பார்த்து யாரையும் மதிப்பிடக்கூடாது என்பது உண்மைதான் போல.

2 வது சீசனில் அந்த வீரர் சிறப்பாக விளையாடினால் அவருக்கு அற்புதமான வாழ்வு உண்டு..

பல ஐபிஎல் நட்சத்திரங்கள் உள்ளூர் போட்டிகளில் அதிகம் விளையாடுவதில்லை. ஐபிஎல் தொடரிலேயே அதிக பணம் சம்பாதிப்பதால் அவர்களின் ஆசைகளும் லட்சியங்களும் குறைந்து விடுகின்றன. இது இந்திய கிரிக்கெட்டுக்கு சற்று பின்னடைவுதான்.

கடந்த சீசனில் குறைந்த தொகைக்கு வாங்கி விளையாடிய ருதுராஜ் கெயிக்வாட், வெங்கடேஷ் ஐயர், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தற்போதைய மெகா ஏலத்தின் போது பல கோடிகளுக்கு தக்கவைக்கப்பட்டனர். ஆனால் மூன்று வீரர்களும் மோசமாக விளையாடினர்.