என்னா துணிச்சல்.. சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர் எடுத்த அதிரடி முடிவு.. என்ன நடக்கபோகுது?

இனிமேல் சொதப்பினால் ப்ளேயிங் 11ல் இருந்து விலகி கொள்கிறேன் என சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

என்னா துணிச்சல்.. சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர் எடுத்த அதிரடி முடிவு.. என்ன நடக்கபோகுது?

நடப்பு ஆண்டின் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியை மட்டும் சந்தித்து வருகிறது. இதனால் புதிய கேப்டன் ஜடேஜா மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

சென்னை அணியின் தோல்விக்கு முதன்மை காரணமாக பார்க்கப்படுவது பவுலிங் தான். தீபக் சஹார் இல்லாத காரணத்தால், முகேஷ் சௌத்ரியை வைத்து சமாளித்து வருகின்றனர். ஆனால் கடந்த ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் இவரும் ஃபார்முக்கு வந்துவிட்டார். பவுலிங் சரியாக அமைந்து வரும் நிலையில் பேட்டிங் இன்னும் சரியாக அமையவில்லை.

சென்னை அணியின் முக்கிய வீரரான ருதுராஜ் கெயிக்வாட் 4 போட்டிகளிலும் பெரிதாக ரன்கள் அடிக்கவில்லை.. முதல் மூன்று போட்டியில் 2 ரன்கள்.. கடைசியாக விளையாடிய போட்டியில் 16 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனால், இவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில், இது குறித்து ருதுராஜுடன் தோனி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். அதில் இது தான் உனக்கு கடைசி வாய்ப்பு எனவும், அதில் சிறப்பாக விளையாடவில்லை என்றால் ப்ளேயிங் 11ல் வாய்ப்பை நினைத்து பார்க்க கூடாது என எச்சரிக்கை விடுத்ததாக தெரிகிறது.

இதற்கு ருதுராஜ் கெயிக்வாட்டும் ஓகே சொல்லிவிட்டாராம். அடுத்த போட்டியில் நான் சிறப்பாக விளையாடவில்லை என்றால் நீக்கிவிடுங்கள் என பகிரங்கமாக தெரிவித்துள்ளார். ஓப்பனாக  நீக்கிவிடுங்கள் என கூறிவரும் ருதுராஜ் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் போல் தெரிகிறது. அடுத்த போட்டி நாளை இரவு ஆர்சிபியுடன் நடைபெறுகிறது. இதில் அவர் நல்ல கம்பேக் கொடுப்பார் என எதிர்பாக்கப்படுகிறது.