மாஸ்டர் பிளான் போட்டு கோலியின் விக்கெட்டை தட்டித்தூக்கிய தல தோனி! - இணையத்தில் வைரலாகும் வீடியோ

மாஸ்டர் பிளான் போட்டு கோலியின் விக்கெட்டை தட்டித்தூக்கிய தல தோனி! -  இணையத்தில் வைரலாகும் வீடியோ

பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல். போட்டியில், தோனி சாதுர்யமாக பீல்டிங் செட்டப் செய்து, விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நேற்று நடைபெற்ற 22வது லீக் போட்டியில், சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இதில் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, வெறும் 1 ரன்னுக்கு அவுட்டனார்.

முன்னதாக, பீல்டிங்கை மாற்றி அமைத்த தோனி, டீப் ஸ்கொயர் லெக்கில் ஷிவம் துபேவை நிறுத்தி, முகேஷ் சவுத்ரியை ஷார்ட் பாலாக வீசச் செய்தார். முகேஷ் சவுத்ரியும் அதனைக் கச்சிதமாக செய்ய, விராட் கோலி, துபேவிடம் கேட்ச் கொடுத்து அவுட்னார். தோனியின் இந்த மாஸ்டர் பிளான் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.