வயசானாலு உன் ஸ்டைலும் பந்துவீச்சும் கொஞ்சம் கூட மாறவே இல்லை!!மகனையே தோற்கடித்த ஆஸ்திரேலிய வீரர்...

ஆஸ்திரேலிய வீரர் தனது மகனுடன் கிரிக்கெட் விளையாடிய வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வயசானாலு உன் ஸ்டைலும் பந்துவீச்சும் கொஞ்சம் கூட மாறவே இல்லை!!மகனையே தோற்கடித்த ஆஸ்திரேலிய வீரர்...

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீக்கு உலகம் முழுவதும் பல்வேறு ரசிகர்கள் உள்ளனர். அவர் தனது அசுர வேகத்தாலும், யாக்கர்களாலும் எதிரணி பேட்ஸ்மேன்களை கலங்க வைக்கக் கூடியவர். அப்படி பிரட் லீயின் வேகத்தை எதிர்கொள்ள முடியாமல் பல பேட்ஸ்மேன்கள் தூக்கத்தை தொலைத்த கதைகள் பல உண்டு.

இதுவரை ஆஸ்திரேலிய அணியில் இவர் விளையாடிய 76 டெஸ்ட் போட்டிகளில் கிட்டத்தட்ட 310 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி ஒருநாள் போட்டியில் 380 விக்கெட்டுகளை வீழ்த்தி அதன்மூலம், ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை  பிரட் லீ பகிர்ந்துள்ளார். இப்படி தன் திறமையை சூப்பராக வெளிப்படுத்தி கொண்டிருந்த பிரட் லீக்கு, இடையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரது கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டு, ஓய்வு பெற்றார்.

இவர் போட்டியளாராக பங்கேற்க முடியாமல் இருந்தாலும், பிரட் லீ தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக பல்வேறு போட்டிகளில் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், பிரட்லீயும், அவரது மகனும் கிரிக்கெட் விளையாடும் வீடியோ, சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. 

அந்த வீடியோவில் தற்போது விடுமுறையை சிறப்பாக கொண்டாடி வரும் பிரட்லீ, அவரது மகனுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடியுள்ளனர். அதில் பிரட்லீ மகனான பிரஸ்ட்சன், பேட்டிங் செய்கிறார். அப்போது பந்துவீச வந்த பிரட்லீ, மெதுவாக ஜாக்கிங் செய்து கொண்டே பந்துவீச வந்தார். 46 வயதான பிரட்லீ என்ன செய்ய போகிறார் என்று வீடியோவை பார்த்த நமக்கும், தந்தை தானே என்ற நினைப்பு பிரஸ்ட்சனுக்கும் இருந்திருக்கும். ஆனால் பிரட்லீ யாக்கரை வீச அவரது மகன் பிரஸ்ட்சன் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார். அத்துடன் விடாத பிரட்லீ, மூட்டையை முடிச்சியை தூக்கிட்டு கிட்டு போ என்று கூற, அவரது மகன் சிரித்து கொண்டே சென்றார். இந்த வீடியோவை பிரட்லீயின் சகோதரரான ஷான் லீ, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பிரட்லீக்கு வயசானாலும், அவரது ஸ்டைலும், பந்துவீச்சும் கொஞ்சம் கூட மாறவே இல்லை என்று புகழ்ந்து வருகின்றனர். இவரின் திறமை இன்னும் கொஞ்சம் கூட குறையாமல் இருப்பதால்  பிரட்லீ பயிற்சியாளராக இணையலாம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.