கடும் போட்டி... 'டுபிளஸிஸை' இழந்தது சென்னை அணி... தட்டி தூக்கிய பெங்களூரு அணி.. எத்தனை கோடிக்கு தெரியுமா??

ஐபிஎல் மெகா ஏலத்தில் அணிகள் போட்டி போட்டு வீரர்களை கோடிகள் கொடுத்து எடுத்து வருகின்றனர்.

கடும் போட்டி... 'டுபிளஸிஸை' இழந்தது சென்னை அணி... தட்டி தூக்கிய பெங்களூரு அணி.. எத்தனை கோடிக்கு தெரியுமா??

முதலில் நட்சத்திர வீரர்களின் பட்டியல் ஏலம் விடப்பட்டது. இதில், பாப் டுபிளஸிஸ் பெயர் வந்தது.. உடனே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுக்க ஆரம்பித்தது.

டுபிளஸை எடுக்க சென்னை அணியும், பெங்களூரு அணியும் கடும் போட்டி போட்டு வந்தனர்.

டுபிளஸிஸ்.. சென்னை அணியின் நட்சத்திர நாயனாக விளங்கியவர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல போட்டிகளில் அபாரகமாக விளையாடி வென்று கொடுத்தவர். 100 ஐபில் போட்டிகளில் விளையாடி 2935 ரன்களை விளாசியவர் பாப் டுபிளஸிஸ். கடந்த சீனில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் டுபிளஸிஸ் 2ஆம் இடத்தை பிடித்தார்.

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற டுபிளஸிஸ் தற்போது, டி20 தொடர்களில் விளையாடி வருகிறார். எனினும் வயது காரணமாக அதிகபட்சம் இன்னும் 2 சீசன் தான் விளையாக முடியம்.

இருப்பினும், டுபிளஸிஸ் பெயர் வந்ததும்.. சென்னை அணியும்.. பெங்களூரு அணியும் கடும் போட்டி போட்டு ஏலம் எடுத்து வந்தனர்.

டுபிளஸை தக்க வைக்க சென்னை அணி பல முயற்சிகளை செய்தது. இருந்தாலும் பெங்களூரு அணி 7 கோடி ரூபாய்க்கு டுபிளஸிஸை தட்டி சென்றது. பெங்களூரு அணிக்கு டுபிளஸிஸ் வந்துள்ளதால், அந்த அணியின் பலம் பல மடங்கு அதிகரித்துள்ளது.