ஐபிஎல் மெகா ஏலத்தில் வெளிநாட்டு வீரர்களை வாங்குவதில் அணிகளுக்கு இடையே கடும் போட்டி!!

ஐபிஎல் மெகா ஏலத்தில் வெளிநாட்டு வீரர்களை வாங்குவதில் அணிகளுக்கு இடையே கடும் போட்டி!!

15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான மெகா ஏலத்தின் முதல் நாளில், இந்திய வீரர் இஷான் கிஷனை அதிகபட்சமாக 15 கோடியே 25 லட்ச ரூபாய்க்கு மும்பை அணி ஏலம் எடுத்துள்ளது.

15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் தொடங்குகிறது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் புதிதாக இணைந்துள்ளன. அதற்கான மெகா ஏலம் மதியம் 12 மணிக்கு பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இந்த ஏலத்தில் 161 வீரா்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. முதல் வீரராக ஷிகர் தவானை எட்டு கோடியே 25 லட்ச ரூபாய்க்கு  பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. ஏலம் தொடங்கியவுடனேயே ஷிகர் தவானின் பெயர் தான் முதலில் வாசிக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் இந்திய வீரர் இஷான் கிஷனை அதிகபட்சமாக 15 கோடியே 25 லட்ச ரூபாய்க்கு மும்பை அணி ஏலம் எடுத்தது.

இந்த மெகா ஏலத்தில் முக்கிய வீரர்களான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய சுரேஷ் ரெய்னா, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் ஷகிப் அல் ஹசன் ஆகியோரை அவர்களின் அடிப்படைத்தொகையான இரண்டு கோடி ரூபாய்க்கு யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. இந்த மெகா ஏலம் இரவு 9.30 மணியளவில் நிறைவடைந்தது. இரண்டாம் நாளாக இன்று காலை மீண்டும் ஏலம் தொடங்கி, தொடர்ந்து நடைபெறும்.