நீண்ட கால ஏக்கத்தை இந்திய அணி தீர்க்குமா..?  தென்ஆப்பிரிக்காவுடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம்... 

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த முறை டெஸ்ட் தொடரை வென்று நீண்ட கால ஏக்கத்தை இந்திய அணி தீர்க்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

நீண்ட கால ஏக்கத்தை இந்திய அணி தீர்க்குமா..?  தென்ஆப்பிரிக்காவுடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம்... 

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று செஞ்சூரியனில் தொடங்குகிறது. இப்போட்டி இந்திய நேரடிப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. விராட்கோலி தலைமையிலான இந்திய அணியில் லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். சொந்த மண்ணில் விளையாடுவது தென்ஆப்பிரிக்கா அணிக்கு சாதகமாக இருக்கும். அதே வேளையில் இந்திய அணி கடும் சவால் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி வெளிநாட்டு சுற்றுப் பயணங்களில் டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவை அதன் மண்ணில் டெஸ்ட் தொடரில் வீழ்த்தியது. அதே போல் இங்கிலாந்து சுற்றுப் பயணத்திலும் சிறப்பாக விளையாடியது. இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் நம்பிக்கையுடன் களம் இறங்குகிறார்கள்.

இந்திய அணி இதுவரை தென்ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லவில்லை. 1992-ம் ஆண்டு முதல் 7 முறை சுற்றுப்பயணம் செய்து உள்ளது. இந்த முறை டெஸ்ட் தொடரை வென்று நீண்ட கால ஏக்கத்தை இந்திய அணி தீர்க்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.