அயர்லாந்துக்கு எதிராக முதல் 20 ஓவர் போட்டி.. வெற்றி முனைப்புடன் இந்திய அணி!!

அயர்லாந்துக்கு எதிராக முதல் 20 ஓவர் போட்டி.. வெற்றி முனைப்புடன் இந்திய அணி!!

அயர்லாந்து அணிக்கு எதிராக இன்று இரவு நடைபெறும் முதல் 20 ஓவர் போட்டியில் வெற்றி முனைப்புடன் இந்திய அணி விளையாட உள்ளது.

அயர்லாந்து சென்றுள்ள ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி, அந்நாட்டு அணியுடன் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் இருபது ஓவர் போட்டி டப்ளின் நகரில் இந்திய நேரப்படி இன்று இரவு 9 மணிக்கு தொடங்குகிறது.

பால்பரீன் தலைமையிலான அயர்லாந்து அணியும் இந்தியாவுக்கு சவால் கொடுத்து விளையாடும் என கருதப்படுகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, இந்தியாவை வழிநடத்த தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், எந்த நேரத்தில், அணிக்கு என்ன முடிவு தேவை என்பதில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.