கலைஞர் நூற்றாண்டு விழா மாரத்தான் போட்டி தொடங்கியது...!

கலைஞர் நூற்றாண்டு விழா  மாரத்தான் போட்டி தொடங்கியது...!

மறைந்த முன்னாள் முதலைச்சர் கலைஞர் புகழை உலக சரித்திரத்தில் (Guinness) இடம் பெற கலைஞர் நூற்றாண்டு விழா  மாரத்தான் போட்டியை சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

உடன் அமைச்சர் மா சுப்பிரமணியம் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த மாரத்தான் போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 15 வயது முதல் 60 வயது வரை உள்ள நபர்களும் மேலும் திருநங்கை உள்பட 40000 ஆயிரத்திற்கு மேற்பட்டோர்  கலந்து கொண்டனர்.

இந்த மாரத்தான் போட்டியில் அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துமனையின் இயக்குனர் தேரனிராஜன், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துமனையின் இயக்குனர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கலைஞர் நினைவு மாரத்தானில் 43,320 பேர் பங்கேற்பு; வசூலான பதிவுக் கட்டணம்  ரூ.1.20 கோடியை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கல் | 43,320 people participated  in the ...

இந்த மாரத்தான் போட்டி 21.கி.மீ,10 கி.மீ,மற்றும் 5 கி.மீ என மூன்று பிரிவாக பிரிகப்பட்டுள்ளது.இந்த 21 கி.மீ வரை 14 வகையான இசை கலைஞர்கள் விதவிதமான இசைகளை இசைத்து போட்டியாளர்களை ஊக்குவித்தனர்.

இந்த மாரத்தான் போட்டியில் வெளிநாட்டு தூதரகர்கள் உட்பட கலந்து கொண்டுள்ளனர்.மாநிலக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி என 25000 மேற்பட்ட மாணவர்கள் இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்று உள்ளனர். மேலும் 1500- க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு  முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பரிசுகளை வழங்க உள்ளார்.

பரிசுதொகைகளின் விபரங்களும் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு:-  

அதாவது,  42.2 கி.மீ., மாரத்தான் போட்டியில் வெற்றிபெறுவோருக்கு பரிசுத்தொகையாக:-  

(ஆண் பெண் இருபாலருக்கும்) 

முதல் பரிசுக்கு             - 1 இலட்சம் ரூபாயும், 

இரண்டாம் பரிசுக்கு   - 50 ஆயிரம் ரூபாயும், 

மூன்றாம் பரிசுக்கு      - 25 ஆயிரம் ரூபாயும்   வழங்கப்படும்.

அதேபோல,   21.1 கி. மீ., மாரத்தான் போட்டியில் வெற்றிபெறுவோருக்கு பரிசுத்தொகையாக:-

(ஆண் பெண் இருபாலருக்கும்) 

முதல் பரிசுக்கு             - 1 இலட்சம் ரூபாயும், 

இரண்டாம் பரிசுக்கு   - 50 ஆயிரம் ரூபாயும், 

மூன்றாம் பரிசுக்கு      - 25 ஆயிரம் ரூபாயும்   வழங்கப்படும்.

மேலும், 10 கி. மீ., மாரத்தான் போட்டியில் வெற்றிபெறுவோருக்கு பரிசுத்தொகையாக:-

(ஆண் பெண் இருபாலருக்கும்) 

முதல் பரிசுக்கு             - 50 ஆயிரம்ரூபாயும், 

இரண்டாம் பரிசுக்கு   - 25 ஆயிரம் ரூபாயும், 

மூன்றாம் பரிசுக்கு      - 15 ஆயிரம் ரூபாயும்   வழங்கப்படும்.

மற்றும், 5  கி. மீ., மாரத்தான் போட்டியில் வெற்றிபெறுவோருக்கு பரிசுத்தொகையாக:-

(ஆண் பெண் இருபாலருக்கும்) 

முதல் பரிசுக்கு             - 25 ஆயிரம்  ரூபாயும், 

இரண்டாம் பரிசுக்கு   - 15 ஆயிரம் ரூபாயும், 

மூன்றாம் பரிசுக்கு      -  10 ஆயிரம் ரூபாயும்   வழங்கப்படும்.

அதுமட்டுமல்லாமல் இந்த மாரத்தான் போட்டியில்  பங்குபெறும் திருநம்பிகள் மற்றும் திருநங்கைகள் 1063 பேருக்கு  ஊக்கத்தொகையும் வழங்கப்படும். இதனை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அதன்படி இந்த மாரத்தான் போட்டியில்  5  கி. மீ., மாரத்தான் போட்டியில் வெற்றிபெறுவோருக்கு பரிசுத்தொகையாக:-

( திருநம்பி, திருநங்கை )

முதல் பரிசுக்கு             - 50 ஆயிரம் ரூபாயும், 

இரண்டாம் பரிசுக்கு   - 25 ஆயிரம் ரூபாயும், 

மூன்றாம் பரிசுக்கு      - 15 ஆயிரம் ரூபாயும்   வழங்கப்படும்.

இதையும் படிக்க    | ” நிலவின் சுற்று வட்டப் பாதைக்குள் நுழைந்தது சந்திராயன்-3 ” - இஸ்ரோ அறிவிப்பு..!