டிஎன்பிஎல் தொடா்: கோவை கிங்ஸ் அணி சாம்பியன்!

டிஎன்பிஎல் தொடா்: கோவை கிங்ஸ் அணி சாம்பியன்!

டிஎன்பிஎல் இறுதிப் போட்டியில் நெல்லை அணியை வீழ்த்தி கோவை கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 

டிஎன்பிஎல் கிாிக்கெட் தொடாின் இறுதிப் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியும், நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த கோவை அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய சுஜய் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான சுரேஷ் குமார், முகேசுடன் ஜோடி சேர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இறுதியில் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெல்லை அணியின் தொடக்க வீரா் ஸ்ரீ நிரஞ்சன் ரன் எடுக்காமல் வெளியேற, அவரை தொடர்ந்து களமிறங்கிய அஜிதேஷ் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடா்ந்து ரித்திக் ஈஸ்வரன் 4 ரன்னும், சோனு யாதவ் ரன் ஏதும் எடுக்காமலும், ஹரிஸ் 1 ரன்னும், மோகன் பிரசாத் 3 ரன்னும் எடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் அந்த அணி 15 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 104 ரன்கள் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

இதையும் படிக்க:பக்கத்து அலுவலகத்தில் லஞ்சம்; கைது செய்த சிபிஐ; தண்டனை வழங்கிய கோர்ட்!