"விளையாட்டுத்துறை ஸ்டார் துறையாக வளர்ந்துள்ளது" முதலமைச்சர் பெருமிதம்!!

தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறை ஸ்டார் துறையாக வளர்ந்து வருவதாக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தொிவித்துள்ளாா். 

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற வீரா், வீராங்கனைகளுக்கு பரிசளிப்பு விழா சென்னை எம்ஆர்சி நகாில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழ்நாட்டை சோ்ந்த 20 வீரா், வீராங்கனைகளுக்கு 9 கோடியே 40 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையை வழங்கினாா். 

தொடா்ந்து மேடையில் பேசிய அவா்,  தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறை ஸ்டார் துறையாக வளர்ந்து வருவதாகவும், தமிழ்நாட்டு வீரர்கள் பதக்கங்களை வெல்வது பெருமையாக உள்ளதாகவும் கூறினாா்.  

திராவிட மாடல் அரசு அனைத்துத் துறைகளிலும் கவனம் செலுத்திவருவதாக குறிப்பிட்ட முதலமைச்சா் சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு வீரர்கள் அதிக பதக்கங்களை வென்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தொிவித்ததாா். 

தொடா்ந்து பேசிய மு.க.ஸ்டாலின் இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்கங்களில் 28 சதவீதம் தமிழ்நாட்டில் இருந்து பெறப்பட்டுள்ளதாக கூறினாா். மேலும் 2018ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டியில் தமிழ்நாட்டு வீரர்கள் 22 பதக்கங்களை வென்றுள்ளதாகவும், இந்த முறை 28 பதக்கங்களை வென்று இருக்கிறார்கள் எனவும் கூறினாா். 

தொடா்ந்து பேசிய அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு என்றால் சமூக நீதி என்பார்கள், அது போலவே தமிழ்நாடு என்பது விளையாட்டிலும் சிறந்து விளங்கும் என தொிவித்தாா்.