கார்ல்சனை திணறடித்த பிரக்ஞானந்தா!!!!

கார்ல்சனை திணறடித்த பிரக்ஞானந்தா!!!!

ஐந்து முறை உலக செஸ் சாம்பியனான மேக்ஸ் கார்ல்சனை ஆச்சரியப்பட வைத்துள்ளார் இந்தியாவின் பிரக்ஞானந்தா.

மியாமியில் செஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.  அதில் பங்கேற்ற இளம் செஸ் மாஸ்டரான பிரக்ஞானந்தா அவரது முதல் ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்கினார்.  ஆனால் அதற்கு அடுத்த இரண்டு ஆட்டங்களில் வியட்நாம் மற்றும் போலந்து வீரர்களிடம் தொடர்ச்சியாக தோல்வியுற்றார்.  அடுத்த  இரண்டு ஆட்டங்கள் டிராவில் முடிந்தது.

இறுதி போட்டியில் பின்தங்கிய பிரக்ஞானந்தா உலக செஸ் சாம்பியனான கார்ல்சனை தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களில் தோல்வியடைய செய்து சாதனை செய்துள்ளார்.  

தொடர்ச்சியாக பிரக்ஞானந்தாவால் திணறடிக்கப்பட்ட கார்ல்சன் இறுதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி அதிக புள்ளிகளை பெற்று முதலிடம் பெற்றார். பதினேழு வயதான பிரக்ஞானந்தா போட்டியில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.