விராட் கோலியை யாராலும் தொடக்கூட முடியாது.. திடீரென சப்போர்ட் பண்ணும் சச்சின்.. அப்படி என்ன நடந்தது?

விராட் கோலியை யாராலும் தொடக்கூட முடியாது என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெரிவித்துள்ளார்.

விராட்  கோலியை யாராலும் தொடக்கூட முடியாது.. திடீரென சப்போர்ட் பண்ணும் சச்சின்..   அப்படி என்ன நடந்தது?

இந்திய கிரிக்கெட்டில் ஜாம்பவான விளங்கியவர் சச்சின்.. தற்போது விராட் கோலி அந்த பெருமையை பெற்று வருகிறார். சச்சின் - விராட் கோலி, இவர்களின் யார் சிறந்தவர் என அவர்களின் ரசிகர்கள் மோதிக்கொள்வது பல காலமாக நடந்து வருகிறது.

விராட் கோலி 50 ஓவர் போட்டியில் இன்னும் 6 சதங்கள் அடித்தால், சச்சின் அடித்த 49 சதங்களை கடந்து சாதனை படைப்பார்.  ஆனால். ஒட்டு மொத்த ரன்கள், 200 டெஸ்ட் மேட்ச் விளையாடியவர் என்ற சாதனைகளை கோலி படைப்பது மிகவும் கடினமான ஒன்றாக மாறிவிட்டது.

1998ல் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் உட்பட 42 இன்னிங்ஸ்களில் 2541 ரன்கள் எடுத்தார் சச்சின். விராட் கோலி 2016ல் 41 இன்னிங்ஸில் 2595 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால் இரண்டரை வருடங்களாக சதமே அடிக்கவில்லை.

இந்நிலையில், விராட் கோலி குறித்து சச்சின் பேசியுள்ளார். அதில், 100 டெஸ்டில் ஆடுவதே மிக பெரிய சாதனை.. அதிலும் விராட் கோலிக்கு கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் அனுபவம் உள்ளது. 33 வயதை நெருங்கிய விராட் கோலி கண்டிப்பாக 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்.

ஏனெனில், அவரின் உடல் பிட்னெஸ் அப்படி உள்ளது.. அவர் இன்னும் 10 ஆண்டுகள் விளையாடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவரை யாரும் தொடக்கூட முடியாது என்பதுதான் உண்மை.. எப்படியும் அடுத்த 7 - 8 ஆண்டுகளில் 100 டெஸ்ட் போட்டிகள் நடைபெறலாம். இதில் நிச்சயம் அவர் சாதிப்பார் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.