முதல் வெற்றி என்றாலும்... த்ரில் வெற்றியை பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ்!

முதல் வெற்றி என்றாலும்... த்ரில் வெற்றியை பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ்!

டெல்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல். போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ், தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. 

டெல்லி அருண்ஜெட்லி விளையாட்டு மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது. அதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா , டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் பிரித்வி ஷா 15 ரன்களில் வெளியேறினார். பின்னர் வார்னர், மனிஷ் பாண்டே இணைந்து சிறப்பாக விளையாடினர்.  இறுதியில் 19 புள்ளி 4 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு டெல்லி அணி 172 ரன்கள் எடுத்தது.

இதையும் படிக்க : 100 ரூபாய் வராத ஆத்திரத்தில் ஏடிஎம்க்கு கும்மாங்குத்து விட்ட வாலிபர்..! சுக்கு நூறாக நொறுங்கிய ஏடிஎம் இயந்திரம்..!

தொடர்ந்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடியது. தொடக்க வீரர்களாக இஷான் கிஷன், ரோகித் சர்மா களமிறங்கினர். இதில் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 65 ரன்கள் எடுத்தார். கடைசி 3 ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது டிம் டேவிட் , கேமரூன் கிரீன் இருவரும் பவுண்டரி , சிக்சர் என பறக்க விட்டனர். விறுவிறுப்பான ஆட்டத்தின் கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்டது. டெல்லி அணியின் நோர்ஜே வீசிய அந்த ஓவரில் கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்து மும்பை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.