பாகிஸ்தான் மக்களின் மனதை வென்ற முகமது ரிஸ்வான்: போட்டி முடிந்து ஐசியு பிரிவில் தீவிர சிகிச்சை

பாகிஸ்தான் மக்களின் மனதை வென்ற முகமது ரிஸ்வான்: போட்டி முடிந்து ஐசியு பிரிவில் தீவிர சிகிச்சை

பாகிஸ்தான் அணியின் வெற்றிகரமான தொடக்க வீரரான முகமது ரிஸ்வான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு 2 நாட்கள் முன்பாக ஃப்ளூ காய்ச்சலினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் ஆனால் நேற்று வந்து பிரமாதமான இன்னிங்ஸை ஆடியதை ஹீரோ என்று வர்ணித்துள்ளார் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர்.டி20 உலகக்கோப்பை 2021-லிருந்து நேற்று ஆஸ்திரேலியாவிடம் தோற்று வெளியேறியது.

இந்த பாகிஸ்தான் அணியின் ஹீரோவாகப் பார்க்கப்படுபவர் விக்கெட் கீப்பர்-தொடக்க பேட்ஸ்மென் முகமது ரிஸ்வான் ஆவார். 6 போட்டிகளில் 281 ரன்களை விளாசியுள்ளார் ரிஸ்வான். பாபர் ஆசமுக்குப் பிறகு (303 ரன்கள்) அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 2ம் இடத்தில் இருக்கிறார் ரிஸ்வான்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்துக்கு 2 நாட்கள் முன்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஃப்ளூ காய்ச்சலுக்கு அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டார். ஆனால் நேற்று இறங்கி 52 பந்துகளில் 67 ரன்களை 4 சிக்சர்கள், 3 பவுண்டரியுடன் எடுத்தார் ரிஸ்வான். துபாய் மருத்துவமனையில் ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக ஷோயப் அக்தர் கூறியுள்ளார்.

ரிஸ்வான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த படத்தையும் பகிர்ந்த ஷோயப் அக்தர், உங்களால் நம்ப முடிகிறதா, இவர் இன்று நாட்டுக்காக ஆடி பெரிய பங்களிப்பு செய்ததை? கடந்த 2 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பெரிய மரியாதை ஏற்படுகிறது. ஹீரோ ரிஸ்வான்" என்று பதிவிட்டுள்ளார்.