சென்னையில் மினி விளையாட்டு அரங்கங்கள்...! அரசாணை வெளியீடு....!

சென்னையில் மினி விளையாட்டு அரங்கங்கள்...!  அரசாணை வெளியீடு....!

சென்னையில் கொளத்தூர், சேப்பாக்கம் உள்ளிட்ட 10 தொகுதிகளில் தலா ரூ.3 கோடி மதிப்பில் மினி    விளையாட்டு அரங்கம் அமைக்க அரசாணை வெளியீடு.

அனைத்து தொகுதிகளிலும் தலா ரூ.3 கோடி மதிப்பில் விளையாட்டு அரங்கங்கள் அமைக்க முதற்கட்டமாக 10 விளையாட்டு அரங்கங்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

கொளத்தூர், சேப்பாக்கம், வாணியம்பாடி, காங்கேயம், சோழவந்தான், திருவெரும்பூர், ஸ்ரீவைகுண்டம், பத்மநாதபுரம், ஆலங்குடி, காரைக்குடி ஆகிய பத்து தொகுதிகளில் மினி விளையாட்டரங்கம் அமைக்க அந்தந்த நிர்வாகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

 இதையும் படிக்க:.....விடுமுறை நாளில் பணி செய்தவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம்..! உயர்நீதிமன்றம் உத்தரவு...!!

"தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளிலும் மினி விளையாட்டு அரங்கம் அமைப்பதே என் முதல் பணி" என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.  
அதன்படி முதற்கட்டமாக இடவசதி கண்டறியப்பட்டுள்ள 10 தொகுதிகளில் மினி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கின.

ஓடுதள பாதை, கைப்பந்து, கூடைப்பந்து, கபடி, கோ-கோ, சுற்றுச்சுவர், பார்வையாளர்கள் மாடம், விளையாட்டு வீரர்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் என நவீன வசதிகளுடன் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. 

இதையும் படிக்க;.... ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்...! தமிழ்நாடு அரசு எச்சரிக்கை..!!