பிசிசிஐ-க்கு அடித்த "மெகா மெகா லக்".. அதுவும் ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக.. பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

ஐபிஎல் வரலாற்றிலே இது வரை நடக்காத சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதன் என்னவென்றால், இதுவரை இல்லாத அளவில் ஸ்பான்சர்ஷிப் வருமானத்தை பிசிசிஐ ஈட்டியுள்ளது.

பிசிசிஐ-க்கு அடித்த "மெகா மெகா லக்".. அதுவும் ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக..  பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

15வது சீசன் ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் 26ஆம் தேதி மும்பை வான்கடேவில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.. பிசிசிஐ, இந்த முறை புதிதாக 2 அணிகளை சேர்த்து பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை ஏற்கனவே ஈட்டியிருந்தது.

இந்நிலையில் தற்போது, ஸ்பான்ஸர்ஷிப்பிலும் மெகா மெகா லக் அடித்துள்ளது. 2023ஆம் ஆண்டு வரை ஐபிஎல் தொடருக்கான மெயின் ஸ்பான்சராக ஒப்பந்தம் செய்யப்பட்ட விவோ நிறுவனம் திடீரென விலகியது. இதை தொடர்ந்து டாடா நிறுவனம் புதிய ஸ்பான்சராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

விவோ நிறுவனம் ஒரு சீசனுக்கு ரூ.440 கோடி வழங்கி வந்தது. 2 புதிய டீம்கள் வருவதால் 2022ஆம் ஆண்டு ரூ.484 கோடியும் மற்றும் 2023ஆம் ஆண்டு ரூ.512 கோடியும் தர இருந்தது. ஆனால் டாடா நிறுவனம் ஒரு சீசனுக்கு ரூ.335 கோடி மாட்டும் தான் வழங்க உள்ளது. அதன் படி, இரண்டு சீசன்களுக்கு சேர்த்து ரூ.670 கோடி தான் தர உள்ளது. இதில் நஷ்டம் ஏற்பட்டாலும், பிசிசிஐ தனது துணை ஸ்பான்சர்ஷிப்பை அதிகப்படுத்தியுள்ளது.


பிசிசிஐ இதுவரை 6 துணை ஸ்பான்சர்களை வைத்திருந்தது. தற்போது ரூபே மற்றும் ஸ்விக்கி நிறுவனக்களும் இதில் சேர்ந்துள்ளது. அதன்படி ட்ரீம் 11 (ரூ. 48 கோடி), அன் அகாடமி ( ரூ. 46 கோடி), க்ரெட் ( ரூ. 44 கோடி ), அப்ஸ்டாக்ஸ் ( ரூ.42 கோடி), ரூபே ( ரூ.42 கோடி), ஸ்விக்கி ( ரூ. 44 கோடி ), பேய்டிம் ( ரூ.28 கோடி ), சியட் ( ரூ. 28 கோடி) ஆக உள்ளது.

இதன் மூலம் சுமார் 800 கோடி ரூபாய் ஐபிஎல் தொடர் மூலம் பிசிசிஐ வருமானம் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு ஸ்பான்ஸர்ஷிப் மூலம் கிடைக்கப்போகும் அதிக தொகை இதுவாக தான் இருக்கும்..