இந்தியா - தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டி... வலுவான தொடக்கம் கொடுத்த மயங்க் - ராகுல் ஜோடி...

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டி... வலுவான தொடக்கம் கொடுத்த மயங்க் - ராகுல் ஜோடி...

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தலா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நேற்று பிற்பகல் தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மயாங்க் அகர்வாலும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். இருவரும் தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். 

சிறப்பாக ஆடி அரைசதம் கடந்த மயாங்க் அகர்வால் 60 ரன்களுக்கு லுங்கி இங்கிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதனையடுத்து களமிறங்கிய செத்தேஸ்வர் புஜாரா, முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி சிறிது நேரம் தாக்குப் பிடித்தாலும், 35 ரன்களுக்கு இங்கிடி பந்தில் வெளியேறினார்.

ஆனால், மற்றொரு புறம் நிலைத்து நின்று ஆடிய கே.எல்.ராகுல் சிறப்பாக ஆடி, சதம் அடித்து அசத்தினார். கே.எல். ராகுல் 103 ரன்களுடனும், அஜிங்க்யா ரகானே 25 ரன்களுடன் ஆடி வருகின்றனர். இந்திய அணி 78 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது.