தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்ட மேக்ஸ்வெல்.. என்ன செய்தார் அப்படி?

தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்ட மேக்ஸ்வெல்.. என்ன செய்தார் அப்படி?

எனது வாழ்நாளில் நான் செய்த அந்த தவறு தான் அதற்கு காரணம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல் கூறி மன்னிப்பு கேட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரராக திகழ்ந்து வந்த மேக்ஸ்வெல், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய அணியில் இருந்து நீக்கப்பட்டார். மேக்ஸ்வெல்-க்கு ஆஸ்திரேலிய அணியின் அடுத்த கேப்டனாக ஆகும் தகுதி இருந்தும், அவர் நிராகரிக்கப்பட்டார். அவர் மீது பல குற்றசாட்டுகள் எழுந்தன.
பின்னர் உள்ளூர் போட்டிகளிலும் பிக் பாஷ் தொடரிலும் விளையாடி மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்தார்.

இருப்பினும், சிறப்பாக பௌலிங் செய்யும் வீரர்களை அதிர வைக்கும் வீரராக மேக்ஸ்வெல் திகழ்ந்து வந்தார்.

2015 உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிராக 52 பந்துகளில் 102 ரன்கள் எடுத்தார். இது இன்றுவரை இரண்டாவது அதிவேக உலகக் கோப்பை சதமாகும். அதேபோல், 2016 இல் இலங்கைக்கு எதிராக 65 பந்துகளில் 145 ரன்கள் எடுத்தார். இது T20 போட்டிகளில் நான்காவது அதிகபட்ச ஸ்கோராகும்.

தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த மேக்ஸ்வெல்.. காலம் போக போக அவரின் ஆட்டம் மோசமாக நிலைக்கு சென்றது.. இதன் பிறகு 2 பந்துகள் ஆட்டுவார் அப்புறம் அவுட் ஆகி விடுவார் என பெயர் அவருக்கு வர தொடங்கியது. இதன் பிறகு கடந்த ஆண்டு நல்ல பார்முக்கு வந்த மேக்ஸ்வெல் அதனை சரியாக பயன்படுத்தாமல் மீண்டும் சொதப்பி வந்தார்.

இது குறித்து பேசிய மேக்ஸ்வெல், என் வாழ்நாளில் நான் செய்த தவறு இது தான்.. கடந்த காலத்தில் நான் மிகவும் அலட்சியமாக செயல்படுவேன்.. சில தொடர்களை நான் பெரிதாக நினைக்க மாட்டேன்.. சில கிரிக்கெட் போட்டிகளில் நான் கடுமையாக உழைத்திருக்க வேண்டும்... நான் அப்படி செய்யவில்லை.. இதனால் என மீது பலரும் கோபப்பட்டு இருக்கிறார்கள்.

நான் செய்த தவறிலிருந்து திருத்தி கொண்டு, மன்னிப்பு கேட்டுவிட்டு அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்.. தற்போது நான்.. என் திறமையை சரியாக வெளிக்கொண்டு வந்து உழைக்கிறேன் என மேக்ஸ்வெல் கூறினார்.

மேக்ஸ்வெல் அளித்த இந்த பேட்டி, அவர் ஏன் ஆஸ்திரேலிய அணியில் இருந்து நீடிக்கப்பட்டார் என்பதை சுட்டி காட்டுகிறது.