கபில் தேவ் சாதனையை முறியடித்த ஜடேஜா...

கபில் தேவ் சாதனையை முறியடித்த ஜடேஜா...

இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் கபில் தேவ்வின் சாதனையை பந்து வீச்சாளர் ஜடஜே முறியடித்துள்ளார்.

அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் 2 வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலியா. இதில் ஜடேஜா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

மேலும் படிக்க | முதல் முறையாக சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணி.... மூன்று தரவரிசைகளிலும் முதலிடம்!!!

இதன் மூலம் 62 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 252 விக்கெட்களை எடுத்துள்ளார். முன்னாள் இந்திய வீரர் கபில் தேவ் 65 போட்டிகளில் தான் 250 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

இந்த பட்டியலில் கபில் தேவ்வை முறியடித்து ஜடேஜா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் 45 போட்டிகளில் 250 விக்கெட்களை எடுத்து ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | சர்ச்சையில் சிக்கிய ஜடேஜா... பந்தை பயன்படுத்தியதில் விதிமுறை மீறலா?!!!