யூரோ கால்பந்து தொடரின் சாம்பியனானது இத்தாலி

யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இத்தாலி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

யூரோ கால்பந்து தொடரின் சாம்பியனானது இத்தாலி

யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இத்தாலி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி கடந்த மாதம் 11-ந்தேதி தொடங்கியது. 24 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் இத்தாலி- இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. தோல்வியே சந்திக்காமல் இறுதிசுற்றை எட்டியுள்ள இவ்விரு அணிகளில் சாம்பியன் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் லண்டன் வெம்ப்லி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. ஆட்டத்தின் முதல் பாதியில் இங்கிலாந்து அணி ஒரு கோலுடன் முன்னிலை வகித்தது. அதில் இங்கிலாந்து அணி வீரர் லூக் ஷாவின் ஆட்டத்தின் 1 நிமிடம் 57 வது வினாடியில் கோல் அடித்து அசத்தினார்.

இதனைத்தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதி ஆட்டத்தின் 67-வது நிமிடத்தில் இத்தாலி அணி வீரர் லியோனர்டோ போனுக்சி கோல் அடித்து அசத்தினார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலைக்கு வந்தது. தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலனளிக்காமல் போனது. இதனைத்தொடர்ந்து அளிக்கப்பட்ட அதிகப்படியான நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பின்னர் பெனாலிட்டி ஷூட் அவுட் முறையில் வெற்றியை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது. அதில் இத்தாலி அணி 3 கோல்களும், இங்கிலாந்து அணி 2 கோல்களும் அடித்தன. இதன்அடிப்படையில் இத்தாலி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 

மகுடம் சூடியுள்ள இத்தாலி அணிக்கு 89 கோடி ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. லீக் சுற்று, நாக்-அவுட் சுற்று வெற்றிகள் அனைத்திலும் வழங்கப்பட்ட பரிசுத் தொகையையும் சேர்த்து சுமார் 300 கோடி ரூபாயை இத்தாலி அணி பரிசாக வென்றது.