சிஎஸ்கே அணியில் என்ன தான் நடக்குது.. தோனி ஏன் இப்படி செய்கிறார்?.. இப்படியே போன சிஎஸ்கே நிலைமை என்ன?

தோனி செய்தது சரியா? தவறா?.. என்னதான் பிரச்சனை?. இப்படியே போன சிஎஸ்கே நிலைமை என்ன?

சிஎஸ்கே அணியில் என்ன தான் நடக்குது.. தோனி ஏன் இப்படி செய்கிறார்?.. இப்படியே போன சிஎஸ்கே நிலைமை என்ன?

நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரின் தொடக்கத்திலே சிஎஸ்கே மோசமான நிலையில் தான் உள்ளது என தான் கூற வேண்டும். கடந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி.. நடப்பு ஆண்டில் தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சிஎஸ்கே-வுக்கு என்ன ஆச்சி?.. ஏன் இப்படி போகுது என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணி முதல் இரண்டு போட்டிகளில் தோற்றது இதுவே முதன் முறை. முதல் மேட்ச் கொல்கத்தா உடன் நடைபெற்றது.  அதில், பேட்டிங் சொதப்பல் ஆனது. அடுத்து லக்னோ அணியுடன் நடந்த போட்டியில் பௌலிங் சொதப்பல் ஆனது. தீபக் சாஹர் இருந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் முக்கிய பிரச்சனை தோனி தான்.

அது என்னவென்றால் ஒரு அணியில் ஒரு தலைமை தான் இருக்க வேண்டும்.. அப்ப தான்  சரியாக வழி நடத்த முடியும்.. ஆனால் ஆட்டத்தின் சில நேரங்களில் ஜடேஜா கேப்டன்சி செய்கிறார். சில நேரங்களில் தோனி முழுவதுமாக கேப்டன் பொறுப்பை எடுத்து கொண்டு  ஃபீல்ட் செட்டிங் மற்றும் பந்துவீச்சில் மாற்றங்களை செய்து வருகிறார். தோனி மீதான நம்பிக்கையால் ஜடேஜாவும் கவனிக்கப்படாமல் போகிறார்.

நேற்றைய போட்டியில் கூட ஜடேஜா முதலில் பந்துவீச்சில் மாற்றங்களைச் செய்தார். ஆனால் கடைசி 4 ஓவர்களில் தன்னையும் அறியாமல் தோனி தன்னை ஒரு கேப்டனாக நினைத்து பவுலர்களை மாற்றினார். 19வது ஓவரை ஷிவம் தூபேவுக்கு கொடுத்தார். இதன் முடிவு சென்னையின் வெற்றியை பறித்தது. இனிமேலாவது ஜடேஜா-வை தோனி கேப்டன்சி செய்ய விடவேண்டும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.