இப்படி தான் பார்த்துப்பாரா?.. ஷேன் வார்னேவின் முக்கிய ரகசியத்தை ஓப்பனாக போட்டு உடைத்த அனில் கும்ப்ளே!!

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக விளங்கும் ஷேன் வார்னே நேற்று முன்தினம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இப்படி தான் பார்த்துப்பாரா?.. ஷேன் வார்னேவின் முக்கிய ரகசியத்தை ஓப்பனாக போட்டு உடைத்த அனில் கும்ப்ளே!!

ஷேன் வார்னே அவரது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து தாய்லாந்திற்கு சுற்றுலா போன்று சென்றுள்ளனர். அங்கு தான் விடுதி அறையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இயற்கை மரணம் என்று சொன்னாலும், அவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக தாய்லாந்து போலீசார் கூறி வருகின்றனர்.

ஷேன் வார்னே மறைவு கிரிக்கெட் உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இன்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வார்னேவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே, ஷேன் வார்னே குறித்து முக்கிய ரகசியத்தை போட்டு உடைத்துள்ளார். 

அவர் கூறியது:- வார்னேவுக்காக ஆஸ்திரேலிய அணி எந்த அளவிற்கு செயல் பட்டு வருகிறது என்பதை  கேட்க மிகவும் ஆச்சிரியகமாக இருக்கும். போட்டியில் எதிரணி பேட்ஸ்மேன் வார்னேவுக்கு நண்பன் என தெரிந்தால், அவரை வீழ்த்தும் எண்ணத்தில் ஆஸ்திரேலிய அணி செயல்பட மாட்டார்கள். அவருடன் நட்பு ரீதியான போட்டிதான் நடக்கும்.

இதேபோல் தான் நானும் ஒரு முறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக போட்டியில் களமிறங்கினேன். நான், வார்னேவின் நண்பன் என்பதால், ஆஸ்திரேலிய வீரர்கள் எனக்கு எந்தவித அழுத்தத்தையும் கொடுக்கவில்லை.. போட்டி ஜாலியாக தான் நடந்தது. இப்படி தான் ஷேன் வார்னே தனது நட்பு வட்டாரங்களை பாதுகாப்போடு பார்த்து கொள்வார்.

பொதுவாக சச்சின் - வார்னே விளையாடுவது சுவாரஸ்யமாக இருக்கும். 1998ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, ஷேன் வார்னே சிறப்பாக பந்துவீசி, சச்சினை முதல் இன்னிங்சில் வீழ்த்தினார். ஆனால் 2வது இன்னிங்சில் வார்னை வீழ்த்தி சச்சின் சிறப்பாக விளையாடினார். எங்கள் நட்பும் இப்படித்தான் இருக்கும் என்றார் அனில் கும்ப்ளே.