அன்று எடுத்த சபதம் தான்.. தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரில் கலக்கி வருவதற்கு காரணமா?

அன்று எடுத்த சபதம் தான்.. தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரில் கலக்கி வருவதற்கு காரணமா?

ஆர்சிபி அணியின் வீரராக வலம் வரும் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரில் அட்டகாசம் செய்து வருவதற்கு காரணம்.. அந்த சபதத்தை நிறைவேற்றவா?

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 6 வது லீக் போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது ஆர்சிப அணி.

நேற்று கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 18 புள்ளி 5 ஓவர்களில் 128 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆண்ட்ரூ ரசல் 25 ரன்னும், உமேஷ் யாதவ் 18 ரன்னும் எடுத்தனர். பெங்களூரு அணி சார்பில் ஹசரங்கா டி சில்வா 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 3 விக்கெட், ஹர்சல் பட்டேல் 2 விக்கெட், சிராஜ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து, 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்கத்தில் பெங்களூரு அணியும் தடுமாறியது.

கேப்டன் டுபிளெசிஸ், விராட் கோலி என அனைத்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்ககள் சொதப்ப... கடைசி 2 ஓவர்களில் 17 ரன்கள் தேவைப்பட்டது. இருப்பினும் தூக்கி அடிக்க முயன்றால் விக்கெட் விலும் என்ற சூழல் உருவானது. அந்த நிலையில் தினேஷ் கார்த்திக் களமிறங்கி சிக்ஸர் மற்றும் பவுண்டரியை பறக்கவிட்டு ஆட்டத்தை முடித்து வைத்தார்.

தோல்வி என்ற நினைத்து கொண்டிருந்த பெங்களூரு அணி.. கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் காப்பற்றி கொடுத்தார். ஆட்டம் முடிந்த பிறகு பேசிய டூப்ளசிஸ், இக்கட்டான சூழலில் பொறுமையாக விளையாடி வெற்றியை தேடி தந்த தினேஷ் கார்த்திக், எனது கண்களுக்கு தோனியை போல் தெரிகிறார்.

இந்நிலையில், இதெற்கெல்லாம் காரணம் அன்று தினேஷ் கார்த்திக் எடுத்த சபதம் தான். ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக அவர் ஒரு பேட்டியளித்தார். 

அதில், அடுத்த 3 ஆண்டுகளுக்கு என்னால் கிரிக்கெட் விளையாட முடியும். இந்திய அணியின் ஃபினிஷராக என்னால் இருக்க முடியும். எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம்பிடிப்பதே எனது இலக்கு. அதனால்தான் சையது முஷ்டக் அலி கோப்பையிலும், விஜய் ஹசாரே கோப்பையிலும் விளையாடினேன்.

அதில் நல்ல பயிற்சி பெற்றேன். ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பேன் என்றார். தற்போது அதுபோலவே ஃபினிஷராக செயல் பட்டு வருகிறார். இதே போல் இவர் செயல் பட்டால் நிச்சியம் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும்..