ஒலிம்பிக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஹாக்கி அணி!

ஓலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 

ஒலிம்பிக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஹாக்கி அணி!

ஓலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியின் காலிறுதிப் போட்டியில் உலக தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் இந்திய அணி, 5- ஆம் நிலை அணியான இங்கிலாந்துடன் மோதியது.  இதில் இந்திய அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. இந்தியாவின் தில்பிரீத் சிங்  முதல் கோல் அடித்து இந்தியாவை முன்னிலை பெற செய்தார். இதனைதொடர்ந்து குஜராந்த் சிங் இரண்டாவது கோல் அடிக்க முதல் பாதியில் இந்திய அணி 2க்கு பூஜ்ஜியம் என முன்னிலை வகித்தது. 

இரண்டாவது பாதியில் கோல் அடிக்க தீவிரம் காட்டிய இங்கிலாந்து அணி பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி முதல் கோல் அடித்தது.  இறுதியில் இந்தியாவின் ஹார்திக் சிங் அதிரடியாக கோல் அடிக்க இந்திய அணி 3க்கு 1 ஒன்று என இங்கிலாத்தை வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணி 41 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதி போட்டிக்கு முன்னேறி வரலாற்று சாதனை படைத்துள்ளது.