இந்தியா- வெஸ்ட் இண்டீஸ்: முதலாவது ஒருநாள் போட்டி - 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ்: முதலாவது ஒருநாள் போட்டி - 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ்: முதலாவது ஒரு நாள் போட்டி

இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

களம் இறங்கிய இந்திய அணி:

முதலில் களம் இறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 308 ரன்களை எடுத்தது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷிகர் தவான் 97 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி திரில் வெற்றி:

இதையடுத்து, 309 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. 50 ஓவர் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் எடுத்ததால், இந்திய அணி 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.