டோக்கியோ பாராலிம்பிக்கில் சாதனை படைத்த இந்தியா... 7 பதக்கங்களை வென்று அசத்தல்...

டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்திய வீரர்கள் இதுவரை 2 தங்கம் உள்பட 7 பதக்கங்களை வென்று ஒலிம்பிக் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளனர்.

டோக்கியோ பாராலிம்பிக்கில் சாதனை படைத்த இந்தியா... 7 பதக்கங்களை வென்று அசத்தல்...

மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், இந்தியாவின் அவனி லெகாரா முதல் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.

இதேபோல் ஆடவர் ஈட்டி எறிதல் F-64 பிரிவில், இந்தியாவின் சுமித் அண்டில் 68 புள்ளி 55 மீட்டர் தூரம் எறிந்து, உலக சாதனை படைத்ததோடு, தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

ஆண்களுக்கான எப்56 வட்டு எறிதலில் இந்திய வீரர் யோகேஷ் கதூனியா வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இறுதிப்போட்டியில் 44 புள்ளி 38 மீட்டர் எறிந்த அவர் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தேவேந்திர ஜஜாரியா வெள்ளிப் பதக்கமும்,  எப்46 என்ற மற்றொரு  ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் சுந்தர் சிங் வெண்கல பதக்கமும் வென்றனர். இதையடுத்து நேற்று ஒரு நாளில்  இந்திய அணி 5 பதக்கங்களை வென்றூ வரலாற்று சாதனை படைத்துள்ளது.

ஏற்கனவே டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினா பட்டேல் வெள்ளிப் பதக்கமும், வட்டு எறிதலில் யோகேஷ் காதுனியா வெண்கலமும் வென்றுள்ளனர். இதையடுத்து இந்த தொடரில் இதுவரை இந்திய அணி 7 பதக்கங்களைப் பெற்று பதக்கப் பட்டியலில் 26 இடம் பிடித்துள்ளது. 

வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் வினோத் குமார் வென்ற வெண்கலப் பதக்கம் திரும்ப பெறப்பட்டுள்ளது. மற்ற வீரர்கள் புகாரளித்த நிலையில் அவரது உடல் தகுதியை ஆய்வு செய்த தொழில்நுட்பக் குழு அவர் இந்தப் பிரிவில் பங்கேற்க தகுதியற்றவர் என அறிவித்து பதக்கத்தை திரும்ப   பெற்றது.