"நெவர் எவர் அண்டரெஸ்டிமேட் இந்தியன்" லார்ட்ஸ் டெஸ்டில் மாஸ் காட்டிய கோலி படை...

இங்கிலாந்து அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா அணி அபார வெற்றி பெற்று தொடரில் 1க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 

"நெவர் எவர் அண்டரெஸ்டிமேட் இந்தியன்" லார்ட்ஸ் டெஸ்டில் மாஸ் காட்டிய கோலி படை...

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி  364 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. அதன்பின் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து ஜோ ரூட்டின் சிறப்பான ஆட்டத்தால் 391 ரன்கள் குவித்தது.

தொடந்து 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 55 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின்னர், புஜாரா-ரஹானே ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. 

இதனையடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய இந்தியா 200 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகும் சூழல் உருவானது. ஆனால் கடைசி நாளில் ஷமி மற்றும் பும்ரா ஜோடி சிறப்பாக விளையாடி ரன்களை சேர்ந்தது. 2வது இன்னிங்சில் 298 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி டிக்ளர் செய்தது. 


இதையடுத்து, 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து இந்தியாவின் வேக பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். அதனால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்ததால் அந்த அணி 120 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்களையும், பும்ரா 3 விக்கெட்களையும் சாய்த்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1க்கு0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.