இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் இந்தியா அபார வெற்றி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் 157 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி ஓவல் மைதானத்தில் 50 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றியைப் பதிவு செய்தது

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் இந்தியா அபார வெற்றி!

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியின், இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி சிறப்பாக விளையாடி  466 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 127 ரன்கள் சேர்த்து இந்திய அணிக்கு வலுசேர்த்தார். 

இதன் மூலம் 368 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கியது. 4வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்த அந்த அணி 5வது நாள் ஆட்டத்தை தொடங்கியது.

கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி இந்திய பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இறுதியில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்தியா 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2  க்கு  1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்திய அணியின் வெற்றிக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் தனது 100வது விக்கெட்டை வீழ்த்திய பும்ரா, டெஸ்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற கபில்தேவின் சாதனையை முறியடித்தார்