இந்தியா VS ஆஸ்திரேலியா: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா...மாஸ் காட்டிய இந்தியா!

இந்தியா VS ஆஸ்திரேலியா: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா...மாஸ் காட்டிய இந்தியா!

இந்தியா - ஆஸ்திரேலியா  அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கியது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. போட்டிக்கு முன்பாக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையும் படிக்க : நீங்கள் சேற்றை வீசினாலும்...அதில் தாமரை மலர்வதை யாராலும் தடுக்க முடியாது...பிரதமர் மோடி!

அதன்படி, ஆஸ்திரேலிய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் கவாஜா களம் இறங்கினர். ஆனால், இந்திய அணியின் சுழல் பந்து வீச்சை சமாளிக்க முடியாத ஆஸ்திரேலியா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் 63.5 ஓவர்களில் அனைத்து விக்கெடுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி 177 ரன்களில் சுருண்டது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் அதிகபட்சமாக லபுஸ்சேஞ்ச் 49 ரன்களும், ஸ்மித் 37 ரன்களும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் தங்களுடைய சுழல் பந்து வீச்சார் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்திய அணி வீரர்கள் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், சமி மற்றும் சிராஜ் ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்களையும் எடுத்து எதிர் அணியை 177 ரன்களுக்கெல்லாம் வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது.