இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டி20 போட்டி: 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!!

India won the T20 against West Indies by 68 runs

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டி20 போட்டி: 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில், இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி, ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது.

தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கும் நிலையில், முதல் போட்டி டிரினிடாட்டின் லாரா மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 64 ரன்கள் எடுத்தார். தினேஷ் கார்த்திக், 19 பந்துகளில் 41 ரன்கள் விளாசினார்.

இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணியினரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், அந்த அணியால் வெறும் 122 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால், இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.

இந்திய அணி தரப்பில், அர்ஷ்தீப் சிங், அஸ்வின், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.