ரஞ்சி கோப்பை கிரிக்கெட் - வரலாற்று சாதனை படைத்த ஜார்க்கண்ட்! காலிறுதிக்கு முன்னேறி அசத்தல்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் நாகலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இரு இன்னிங்சையும் சேர்த்து ஆயிரத்து 297ரன்கள் குவித்து ஜார்க்கண்ட் அணி மலைக்க வைத்துள்ளது.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் - வரலாற்று சாதனை படைத்த ஜார்க்கண்ட்! காலிறுதிக்கு முன்னேறி அசத்தல்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் ஜார்க்கண்ட் - நாகலாந்து அணிகள் மோதின. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட் செய்த ஜார்க்கண்ட் அணி, முதல் இன்னிங்சில் 880 ரன்கள் குவித்து மிரள வைத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் குமார் குஷாக்ரா 266 ரன்கள் குவித்தார்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நாகலாந்து அணி 289 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனைத் தொடர்ந்து, 591 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஜார்க்கண்ட் அணி, கடைசி நாளில் 6 விக்கெட் இழப்புக்கு 417 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் டிராவில் முடிந்தது.

இப்போட்டியின் முடிவில், ஜார்க்கண்ட் அணி மொத்தம் ஆயிரத்து 8 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச முன்னிலை இதுவாகும். இதன்மூலம் வரலாற்று சாதனை படைத்த ஜார்க்கண்ட் அணி, போட்டியை டிரா செய்ததால் காலிறுதிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.